அனைத்து உரிமைகளோடு வாழும் நிலை ஏற்படும் வரை ஒற்றுமையாக செயற்படுவோம்

Report Print Theesan in அரசியல்

நாட்டில் வாழ்கின்ற ஏனையவர்களை போல அனைத்து உரிமைகளோடு வாழும் நிலை ஏற்படும் வரை ஒற்றுமையாக செயற்படுவோம் என வட மாகாண அமைச்சர் ப.சத்தியலிங்கம் கூறியுள்ளார்.

வவுனியா - கோவில்குள பகுதியிலுள்ள க.உமாமகேஸ்வரன் நினைவு தூபியில் நேற்று மாலை தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் 28வது வீரமக்கள் தின நிகழ்வுகள் இடம்பெற்றன.

இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். இதன்போது தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக எங்களுக்கான குறைந்தபட்ச தீர்வு கிட்டும் வரையிலும் இந்த நாட்டில் வாழ்கின்ற ஏனையவர்களை போல அனைத்து உரிமைகளோடு வாழும் நிலை ஏற்படும் வரை ஒற்றுமையாகவும் ஒன்றாகவும் செயற்படுவோம்.

அதன் பின்பு உங்களுடைய கட்சி, உங்களுடைய சின்னம் நீங்கள் எங்கு வேண்டுமென்றாலும் போகலாம். ஆனால் அது வரையில் நாம் ஒற்றுமையாகவே இருப்போம் என தெரிவித்தார்.

இதில் நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன், வட மாகாண அமைச்சர் ப.சத்தியலிங்கம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வினோதரலிங்கம், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஜனா, வட மாகாண சபை உறுப்பினர்களான சிவனேசன், ஜி.ரி. லிங்கநாதன் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.