அமைச்சர் டெனீஸ்வரன் விவகாரம்! சீ.வி மீது சம்பந்தன் குற்றச்சாட்டு

Report Print Murali Murali in அரசியல்
advertisement

வடமாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனீஸ்வரனை அமைச்சர் பதவியில் இருந்து நீக்குவதற்கு நடவடிக்கை எடுப்பது குறித்து தன்னுடன் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் ஆலோசிக்கவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் குற்றம் சுமத்தியுள்ளார்.

எமது கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தி வடக்கு மாகாண சபையின் அமைச்சரவையில் அங்கம் வகிப்பதற்கான சகல தகுதிகளையும் பா.டெனீஸ்வரன் இழந்துள்ளார்.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்
advertisement

எனவே, பா.டெனீஸ்வரனை அமைச்சரவையில் இருந்து நீக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறும் கோரி ரெலோ அமைப்பு அண்மையில் வடமாகாண முதலமைச்சருக்கு கடிதம் எழுதியிருந்தது.

இதற்கு பதில் கடிதம் அனுப்பியிருந்த வடமாகாண முதலமைச்சர், அமைச்சர் பா.டெனீஸ்வரன் மீதான நடவடிக்கையின் போது ரெலோ அமைப்பின் பரிந்துரைகளும் கருத்தில் கொள்ளப்படும் என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், அமைச்சர் பா.டெனீஸ்வரனைப் பதவி நீக்குவதற்கான நடவடிக்கைகளை முதலமைச்சர் எடுத்துள்ள நிலையில், இது குறித்து கூட்டமைப்பின் தலைவர் என்ற ரீதியில் அறிவிக்கப்பட்டுள்ளதா என எழுப்பபட்ட கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இதனை கூறியுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், இந்த விடயம் தொடர்பில் ரெலோ அமைப்போ அல்லது வடமாகாண முதலமைச்சரோ தன்னுடன் கலந்தாலோசிக்கவில்லை" என குற்றம் சுமத்தியுள்ளார்.

இந்த நிலையில், குறித்த விடயம் தொடர்பில் தற்போது என்னால் பதில் கூறமுடியாது எனவும் இரா.சம்பந்தன் மேலும் தெரிவித்துள்ளார்.

advertisement