கடற்படையின் முன்னாள் பேச்சாளர் அடிப்படையற்ற குற்றச்சாட்டில் கைது: உதய கம்மன்பில

Report Print Ajith Ajith in அரசியல்

கடற்படையினர் முன்னாள் பேச்சாளர் டி.கே.பி. தஸநாயக்க அடிப்படையற்ற குற்றச்சாட்டுக்களின் அடிப்படையிலேயே கைது செய்யப்பட்டுள்ளதாக பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் செயலாளர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

பொலிஸ் பேச்சாளர் ருவன் குணசேகரவின் தகவலை பார்க்கும் போது 11 இளைஞர்களின் கடத்தல் தொடர்பில் அடிப்படையற்ற குற்றச்சாட்டுக்களின் அடிப்படையிலேயே தஸநாயக்க கைது செய்யப்பட்டுள்ளார்.

எனவே தம்முடன் பகிரங்க விவாதம் ஒன்றுக்கு வருமாறு பொலிஸ் பேச்சாளரை அழைப்பதாகவும் உதய கம்மன்பில கூறியுள்ளார்.

மேலும், போர்க்காலத்தின் போது இடம்பெற்ற கடத்தல்களுக்கு போரை வெற்றி கொண்ட படை வீரர்கள் பொறுப்பல்ல என கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.