இலங்கைக்கு வரும் அவுஸ்திரேலிய, மற்றும் சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர்கள்

Report Print Ajith Ajith in அரசியல்

அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் ஜூலி பிஷொப் (Julie Bishop) இவ்வாரம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.

இதன்போது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க மற்றும் ஏனைய முக்கிய அமைச்சர்கள் சிலரையும் அவர் சந்திக்க உள்ளார்.

இரு தரப்பு பாதுகாப்பு மற்றும் பொருளாதார உறவுகளை மேம்படுத்தும் நோக்கில் அவர் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட உள்ளார்.

டெங்கு காய்ச்சலைத் தடுக்க அவுஸ்திரேலியா வழங்கும் உதவி குறித்தும் ஜனாதிபதியுடன் இணைந்து அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் அறிவிக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், நல்லிணக்க செயற்பாடுகளை நடைமுறைப்படுத்துவதன் முன்னேற்றம் குறித்தும் அவர் பேச்சுவார்த்தைகளை நடத்த உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் கலாநிதி வி.பாலகிருஷ்ணன் (Vivian Balakrishnan) இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.

இவர் இன்றிரவு இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

வி.பாலகிருஷ்ணன் நாளை பிற்பகல் வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவை சந்திக்க உள்ளார்.

இதன்போது இருதரப்பு உறவுகள் குறித்து முக்கிய பேச்சுவார்த்தைகள் இடம்பெறவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.