கடந்த ஆட்சியின் ஊழல் மோசடிகள் விசாரணைகள் 90 சதவீதம் நிறைவு

Report Print Ajith Ajith in அரசியல்

கடந்த ஆட்சியில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பாக மேற்கொள்ளப்படும் விசாரணைகள் 90 சதவீதம் முடிவடைந்துள்ளதாக மின்சக்தி மற்றும் சக்தி பிரதி அமைச்சர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார்.

களுத்துறையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

குறித்த குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்வதற்காக விசேட நீதிமன்றம் அமைக்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.