புதிய அரசியலமைப்பு விடயங்களில் இருந்து கூட்டு எதிர்க்கட்சி உடனடியாக விலக வேண்டும்

Report Print Steephen Steephen in அரசியல்

புதிய அரசியலமைப்புச் சட்டம் தொடர்பான நடவடிக்கை குழு மற்றும் அது சம்பந்தமான சகல நடவடிக்கைகளிலும் இருந்து கூட்டு எதிர்க்கட்சி உடனடியாக விலக வேண்டும் என தேசிய பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் சங்கத்தின் செயலாளர் கலாநிதி சமன்ன ஜயசுமன இதனை கூறியுள்ளார்.

கூட்டு எதிர்க்கட்சி தொடர்ந்தும் அரசியலமைப்புச் சட்டவாக்க நடவடிக்கைகளில் பங்களிப்பு வழங்கினால், நாட்டுக்கு ஏற்படும் ஆபத்துக்கு அவர்களும் பொறுப்புக் கூறவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.