அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு கடிதம் ஒன்றை கையளித்துள்ளனர்.
சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவின் பொறுப்பற்ற செயற்பாடுகள் குறித்து விடயங்களை முன்வைத்து இந்த கடிதம் கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், அரச மருத்துவர்கள் சங்கம் மற்றும் பிரதமரின் இணைப்பு குழுவினருக்கும் இடையில் நேற்று பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதன் போதே கடிதம் கையளிக்கப்பட்டுள்ளது.