பொறுமைக்கும் எல்லை உண்டு: வாசுதேவ

Report Print Steephen Steephen in அரசியல்
advertisement

பல்வேறு காரணங்களை கூறி அரசாங்கம் உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஒத்திவைத்து வருகிறது எனவும் இதனை பொறுத்து கொள்வதற்கும் ஒரு எல்லை இருக்கின்றது எனவும் ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

ஜனநாயக மக்கள் முன்னணி கொழும்பில் இன்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்
advertisement

உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஒத்தி வைக்கும் நோக்கில் அலரி மாளிகையில் பிரதமருடனான சந்திப்பு நடந்த காரணத்தினால், கூட்டு எதிர்க்கட்சி அந்த பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளவில்லை.

நீண்டகாலம் செல்லும் முன்னர் தேர்தல் செயலகம் அருங்காட்சியகமான மாறிவிடும்.

தேர்தல் நடத்தப்படாமல் உள்ளூராட்சி சபைகள் செயலிழந்துள்ளன. இதனால், இனிவரும் காலங்களில் அரசாங்கம் உணரும் வகையில் அழுத்தம் கொடுக்க எண்ணியுள்ளேன்.

தனியார் ஊடகங்கள் அரசாங்கத்தின் நிலைப்பாடுகளுக்கு முன்னுரிமை கொடுக்கின்றன.

எதிர்க்கட்சிகளின் செய்திகளை வெளியிடும் போது தொடர்ந்தும் அரசாங்கத்தை விமர்சிப்பதால், ஊடகங்களை கட்டுப்படுத்தும் சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

ஊடகங்களை கட்டுப்படுத்த அரசாங்கம் எண்ணியுள்ளதாகவும் வாசுதேவ நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.

advertisement