தேசிய பொருளாதாரத்தை வலுப்படுத்துவதில் அரசாங்கம் அர்ப்பணிப்புடன்: ஜனாதிபதி

Report Print Steephen Steephen in அரசியல்

நிதி முகாமைத்துவத்தில் இருக்க வேண்டிய தூய்மை மற்றும் வெளிப்படைத் தன்மையை பாதுகாத்து தேசிய பொருளாதாரத்தை வலுப்படுத்துவதில் அரசாங்கம் அர்ப்பணிப்புடன் இருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

பணச் சலவை சம்பந்தமான ஆசிய பசுபிக் வலய குழுவின் 20வது வருடாந்த மாநாட்டின் ஆரம்ப நிகழ்வில் இன்று கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

பணச் சலவை சம்பந்தமாக சகல நாடுகளும் எதிர்நோக்கியுள்ள சவாலில் வெற்றி பெற வேண்டுமாயின் அது தொடர்பாக தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் ஏற்படுத்திக் கொள்ளப்பட்டுள்ள இணக்கப்பாடுகளை சகல நாடுகளும் அமுல்படுத்த வேண்டும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.