அம்பாந்தோட்டை ஒப்பந்தம் அடுத்த மாதம் கைச்சாத்து! பெரும்பான்மை நிர்வாகப் பலம் இலங்கை அரசுக்கு

Report Print Rakesh in அரசியல்
advertisement

அம்பாந்தோட்டை துறைமுக ஒப்பந்தம் கிட்டத்தட்ட பூர்த்தியடைந்த நிலையில் இருப்பதாகவும், அநேகமாக அடுத்த மாதத்தில் அது கைச்சாத்திடப்படலாம் எனவும் அரசின் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்தத் துறைமுகத்தின் செயற்பாட்டுக்கென இரண்டு தனி நிறுவனங்கள் அமைக்கப்படும். அதில் நிர்வாகப் பிரிவின் பெரும்பான்மைப் பலம் இலங்கை அரசிடமும், வர்த்தக நடவடிக்கைகளின் பெரும்பான்மைப் பலம் சீன நிறுவனத்திடமும் இருக்கும்.

எனவே, இலங்கைத் துறைமுக அதிகாரசபையின் தற்போதைய சட்டதிட்டங்களில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டிய அவசியம் இல்லை எனவும் அவ்வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

அத்துடன், துறைமுகத்தின் வர்த்தக வருமானத்தில் 80 வீதம் சீன நிறுவனத்துக்கும் 20 வீதம் இலங்கை அரசுக்கும் உரித்தாகும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

advertisement