மதுக் கடைகளுக்கான அனுமதிப் பத்திரங்கள் உள்ள நா.உறுப்பினர்களின் விபரத்தை திரட்டும் மகிந்த!

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்

மதுபான நிலையங்களுக்கான அனுமதிப்பத்திரங்களை வைத்திருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் விபரங்களை திரட்டி வருவதாக அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது கருத்து வெளியிட்டுள்ள அவர்,

மதுபான நிலையங்களுக்கான அனுமதிப்பத்திரங்களை வைத்திருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் விபரங்களை நிதியமைச்சரிடம் கோரியிருக்கிறேன்.

போதைப் பொருள் பாவனைக்கு எதிரான செயற்பாடுகள் தொடர்பில் பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. இதன் மூலம் பல்வேறு அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன.

ஜனாதிபதியின் இந்த அறிவுறுத்தல்களை நாடாளுமன்ற உறுப்பினர்களும் பின்பற்ற வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதேவேளை ஜனாதிபதி போதைப் பொருள் தடுப்பு அலுவலகம் விடுத்திருக்கும் செய்தியில்,

நாட்டு மக்கள் 648 வகையான போதைப் பொருட்களுக்கு அடிமையாகியுள்ளனர்.

நாட்டில் உள்ள ஆண்களின் எண்ணிக்கையில் 35 சதவீதமானவர்கள் மதுப்பழக்கம் உள்ளவர்கள் என ஜனாதிபதி போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் வைத்தியளர் சமந்த கிதலவ தெரிவித்துள்ளார்.