ராஜபக்ச குடும்பம் மற்றும் கூட்டு எதிர்க்கட்சியினரின் குற்றங்களை விசாரிக்க துரித நீதிமன்ற கட்டமைப்பு

Report Print Steephen Steephen in அரசியல்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உட்பட ராஜபக்ச குடும்பத்தினர் மற்றும் கூட்டு எதிர்க்கட்சியின் முக்கியஸ்தர்களுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள பாரிய ஊழல், மோசடி குற்றச்சாட்டுக்களை துரிதமாக விசாரிக்க நீதிமன்ற கட்டமைப்பு ஒன்றை உருவாக்குமாறு ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் அழுத்தம் கொடுக்க ஐக்கிய தேசியக் கட்சியினர் தீர்மானித்துள்ளனர்.

ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக பிரதியமைச்சர் அசோக அபேசிங்க தெரிவித்துள்ளார்.

தற்போது முன்னெடுக்கப்படும் விசாரணைகள் மற்றும் நீதிமன்ற செயற்பாடுகள் குறித்து எந்த வகையிலும் திருப்தியடைய முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.

திருடர்களை பிடிப்பது மற்றும் திருடர்களுக்கு தண்டனை வழங்குவது நாளுக்கு நாள் தாமதமாகி வருவது தொடர்பாக ஜனாதிபதியும் பிரதமரும் நீதியமைச்சரிடம் கருத்து கேட்டறிய வேண்டும் எனவும் அசோக அபேசிங்க குறிப்பிட்டுள்ளார்.