நீதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை: 17 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு

Report Print Jeslin Jeslin in அரசியல்

நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவிற்கு எதிராக கொண்டு வருவதற்கு எதிர்பார்த்துள்ள உத்தேச நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் 17 பேர் தற்போது கைச்சாத்திட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவிற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை சமர்ப்பிக்கவுள்ளதாக பல்வேறு கருத்துகள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.