ஊழல் நிறைந்த அரசியல் கலாசாரத்தை ஒரே தடவையில் மாற்ற முடியாது: ஜனாதிபதி

Report Print Steephen Steephen in அரசியல்
advertisement

உயர் மட்டத்தில் இருந்து கீழ் மட்டம் வரை மோசடி, திருட்டு,ஊழல் கரைபுரண்டு ஓடிய நாட்டில், அரசியல் கலாசாரத்தை ஒரே தடவையில் மாற்றியமைக்க முடியாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

எனினும் நேர்மையாக செயற்படும் மற்றும் நாட்டை நேசிக்கும் அரசியல்வாதிகளை உருவாக்கும் கடினமான பணிக்கு தற்போதைய அரசாங்கம் தோள் கொடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்
advertisement

தலாவ விளையாட்டு மைதானத்தில், இன்று நடைபெற்ற மகாவலி எச். வலயத்தின் விவசாயிகளுக்கு காணி உறுதிகளை வழங்கும் நிகழ்வில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.

எப்படியான அவமதிப்புகள், அவதூறுகள் மற்றும் குற்றங்கள் சுமத்தினாலும் அந்த சவால்களை வென்று மக்கள் எதிர்பார்க்கும் தூய்மையான அரசியல் கலாசாரத்தை நாட்டில் உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

எந்தளவுக்கு விமர்சனங்கள், குற்றங்கள் முன்வைக்கப்பட்டாலும் எந்த அரசாங்கமும் நிறைவேற்றாத பல வேலைத்திட்டங்களை தற்போதைய அரசாங்கம் தனது குறுகிய காலத்தில் நாட்டுக்கும் மக்களுக்கு நிறைவேற்றிக் கொடுத்துள்ளது.

விவசாயிகளின் பொருளாதாரத்தை வலுப்படுத்தி, அதன் மூலம் தேசிய பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் பணிக்கு அரசாங்கம் முன்னுரிமை கொடுத்துள்ளது எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

advertisement