மஹிந்தவுடன் இணையும் சம்பந்தன்? எந்த நேரமும் தயாராக மஹிந்த ராஜபக்ச! நாமல் வரவேற்பு

Report Print Shalini in அரசியல்

முன்னாள் ஜனாதிபதியும் நானும் இணைந்து ஆட்சி புரிய வேண்டும் என்று விரும்புவதாக எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்த கருத்துக்கு நாமல் ராஜபக்ச வரவேற்பளித்துள்ளார்.

கௌரவ எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் ஐயாவின் இந்த நிலைப்பாட்டை வரவேற்கிறேன். என நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் இந்தக் கருத்தை நாமல் பதிவிட்டுள்ளார்.


மேலும், ஒன்றுபட்ட இலங்கைக்குள் எமது பிரச்சினைகளுக்கு தீர்வு காண, ராஜபக்ச அன்றும் தயாராக இருந்தார். இன்றும் தயாராக இருக்கிறார் எனவும் நாமல் பதிவிட்டுள்ளார்.

மேல்மாகாண கலாச்சார சதுக்கத்தில் 8ஆம் திகதி இடம்பெற்ற நிகழ்வொன்றில் எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.


இதன்போது, எமது நாட்டில் வாழும் மக்கள் அனைவரும் சம உரிமை கொண்ட ஒரே மக்களாவர். இந்த நாடு என்றும் பிளவுபடக் கூடாது. எமது பிரச்சினைகளை இலகுவாக தீர்த்துக்கொள்ள முடியும்.

எனவே அதனைப் புரிந்து கொண்டு முன்னாள் ஜனாதிபதியும் நானும் இணைந்து ஆட்சி புரிய வேண்டும் என்று விரும்புகின்றேன் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.