அமைச்சுப் பதவியை ராஜினாமா செய்யப் போவதில்லை - நீதி அமைச்சர்

Report Print Kamel Kamel in அரசியல்

அமைச்சுப் பதவியை ராஜினாமா செய்யப் போவதில்லை என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

அண்மையில் கொழும்பின் முன்னணி ஹோட்டல் ஒன்றில் நடைபெற்ற திருமண விருந்துபசார வைபவமொன்றில் பங்கேற்றிருந்த போது, முக்கியஸ்தர்களிடம் இதனைத் தெரிவத்துள்ளார்.

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் பி.எம்.யூ.பஸ்நாயக்கவின் புதல்வியின் திருமண விருந்துபசாரத்தின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இதன்போது, தான் அமைச்சுப் பதவியை துறக்கப் போவதில்லை எனவும், அரசாங்கம் விரும்பிய தீர்மானத்தை எடுக்கும் வரையில் காத்திருக்கப் போவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அன்று போலவே இன்றும் தாம் சரியான விடயங்களை கூறுவதற்கு அஞ்சியதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

அண்மையில் தான் வெளியிட்ட கருத்துக்களுக்கு பௌத்த மாநாயக்க தேரர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் ஆதரவளித்து வருகின்றனர் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.