வடமாகாண சபையில் நெருக்கடி! அவசரமாக ஒன்று கூடும் ரெலோ தலைமை குழு

Report Print Murali Murali in அரசியல்

வடமாகாண சபையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை குறித்து ரெலோ அமைப்பின் தலைமைக் குழுவினர் அவசரமாக சந்திக்கவுள்ளதாக வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிங்கம் தெரிவித்தார்.

இந்த சந்திப்பு இன்று பிற்பகல் 2.30 மணிக்கு வவுனியாவில் இடம்பெறவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில், கூட்டத்தின்போது பா.டெனீஸ்வரன் தொடர்பாக இறுதி முடிவெடுக்கப்படவுள்ளதாக அந்த கட்சியின் தகவலறிந்த வட்டாரங்களை மேற்கொள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.

வடமாகாண அமைச்சரை பதவி விலகுமாறு கோரி ரெலோ அமைப்பினால் 24 மணித்தியாலங்கள் கால அவகாசம் வழங்கியிருந்த நிலையில், தாம் பதவி விலகப் போவதில்லை என டெனீஸ்வரன் தெரிவித்திருந்தார்.

இதேவேளை, பா.டெனீஸ்வரன் தொடர்பில் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோருக்கு இடையில் இன்று சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

இந்த விடயம் தொடர்பில் எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தனை தொடர்புகொண்டு கேட்ட போது, அவ்வாறான சந்திப்பு ஏதும் ஒழுங்கு செய்யப்படவில்லை என தெரிவித்தார்.