ஜனாதிபதியை சந்திக்கும் கட்சித் தலைவர்கள்

Report Print Ajith Ajith in அரசியல்

அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் நாளை சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.

மாகாண சபைத் தேர்தல்களை பிற்போட முயற்சிக்கப்படுகின்றமை குறித்து கட்சித் தலைவர்கள் ஜனாதிபதியை சந்திக்கவுள்ளனர்.

வடமத்திய, சப்ரகமுவ மற்றும் கிழக்கு மாகாண சபைகளின் ஆயுட்காலம் விரைவில் நிறைவடையவுள்‌ளது.

இந்த நிலையில், தேர்தலை பிற்போடுவதற்காக முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றமை குறித்து பல கட்சிகள் அதிருப்தி வெளியிட்டு வருகின்றன.

எனவே, இது தொடர்பில் எதிர்வரும் திங்கட்கிழமை கட்சித் தலைவர்கள் ஜனாதிபதியை சந்தித்து பேசவுள்ளதாக அமைச்சர் ரவூப் ஹக்கீம் கூறியதாக அவரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.