ரணிலை நீக்குவது குறித்து தீர்மானம் இல்லை: துமிந்த திஸாநாயக்க

Report Print Steephen Steephen in அரசியல்

பிரதமர் பதவியில் ரணில் விக்ரமசிங்கவை நீக்கி விட்டு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை சேர்ந்த ஒருவர் பிரதமராக நியமிப்பது குறித்து சுதந்திரக் கட்சி எந்த தீர்மானங்களையும் எடுக்கவில்லை என அந்த கட்சியின் பொதுச் செயலாளரான அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

கண்டி கண்னோருவ பிரதேசத்தில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்ட பின்னர், ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

கடந்த பொதுத் தேர்தலில் மக்கள் இரண்டு பிரதான கட்சிகளுக்கு தனித்து ஆட்சியமைக்கக் கூடிய அதிகாரத்தை வழங்கவில்லை.

இரண்டு கட்சிகளுக்கும் குறைவாக இருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை ஏனைய கட்சிகளிடம் இருந்து பெற்று ஆட்சியமைத்திருக்க முடியும்.

எனினும் நாட்டின் முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் இரண்டு பிரதான கட்சிகள் இணைந்து தேசிய அரசாங்கத்தை அமைத்தன.

தேசிய அரசாங்கம் திடீரென ஏற்படவில்லை. ஜனாதிபதியும் பிரதமரும் மிகவும் புரிந்துணர்வுடன் இரண்டு கட்சிகளின் அனுமதியுடன் நாட்டுக்காக இந்த தேசிய அரசாங்கத்தை அமைத்தனர் எனவும் துமிந்த திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.