நாட்டை உலுக்கிய சம்பவங்களை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம்

Report Print Steephen Steephen in அரசியல்

மிகப் பெரிய ஊழல்,மோசடிகள், மனித கொலைகள் தொடர்பாக விசாரணை நடத்த சிறப்பு நீதிமன்றத்தை ஏற்படுத்த வேண்டும் என அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

பதுரெலியா மோரபிட்டிய பிரதேசத்தில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார். கடந்த காலத்தில் நடந்த இந்த சம்பவங்கள் நாட்டை உலுக்கிய சம்பவங்களாகும்.

இந்த சிறப்பு நீதிமன்றம் மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக மாத்திரம் கொண்டு வரப்படுவதில்லை. நாட்டை உலுக்கிய சம்பவங்கள் தொடர்பாக விசாரணை நடத்தவே ஏற்படுத்தப்படுகிறது.

கொள்ளையடித்தவர்கள் யார் என்பதை முழு நாடும் அறியும். கொள்ளை, ஊழல், மனித கொலைகளுக்கு எதிராகவே நாங்கள் போராடுகிறோம்.

கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களை தற்காத்து கொள்ள அதில் உள்ள தலைவர்கள் கடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இதன் காரணமாகவே அரசாங்கத்தை கவிழ்க்க போவதாக கூறி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்துகின்றனர்.

கூட்டு எதிர்க்கட்சிக்குள் குழப்பம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் ஊடக கண்காட்சிகளை மாத்திரமே நடத்தி வருகின்றனர். தற்போதைய அரசாங்கம் தொடர்ந்தும் முன்னோக்கி செல்லும்.

இந்த வருடத்தை விட அடுத்த வருடம் அரசாங்கம் மேலும் ஸ்திரத்தன்மையை அடைந்து வெற்றிகரமாக முன்னோக்கி செல்லும் எனவும் அமைச்சர் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.