டெனீஸ்வரன் ரெலோவிலிருந்து இடைநீக்கம்!

Report Print Ajith Ajith in அரசியல்

கட்சியின் அடிப்படைகளை மீறிய குற்றச்சாட்டு காரணமாக வடக்கு மாகாண அமைச்சர் பா. டெனீஸ்வரன் ரெலோ கட்சியில் இருந்து 6 மாத காலத்துக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

வவுனியாவில் கூடிய கட்சியின் மத்திய செயற்குழு இந்த முடிவை இன்று இரவு 10.30 மணி அளவில் எடுத்துள்ளது.

கூட்டத்தின் இறுதியில் இது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டது.

கட்சியின் கருத்தை அறியாமல் வடக்கு மாகாண முதல்வருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தில் கையெழுத்திட்டமை மற்றும் கட்சியின் ஒழுங்கை மீறியமை தொடர்பிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி அவர் ரெலோவின் அடிப்படை உறுப்புரிமையில் இருந்து 6 மாதங்களுக்கு நீக்கப்பட்டுள்ளார்.