வெலிக்கடைக்கு சென்ற மகிந்தவுக்கு வந்த கோபம்

Report Print Steephen Steephen in அரசியல்

சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட லலித் வீரதுங்க மற்றும் அனுஷ பெல்பிட்ட ஆகியோரை பார்க்க முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இன்று வெலிக்கடை சிறைச்சாலைக்கு சென்றிருந்தார்.

உள்ளே சென்று திரும்பிய போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த மகிந்த, ஒரு சந்தர்ப்பத்தில் கோபத்தில் பேசியதை காணமுடிந்துள்ளது.

“ தவறில்லை. உத்தரவிட்டது நான் என்பதை ஏற்றுக்கொள்கிறேன். நீங்கள் என்னை தூண்ட முயற்சிக்க வேண்டாம்.

உங்களுக்கு தேவை பெரிய ஊடக கண்காட்சி ” எனக் கூறியுள்ளார்.

அங்கு மேலும் கருத்து வெளியிட்ட அவர், “இது குற்றமல்ல, நான் எட்டு விடயங்களை எழுதிக் கொடுத்திருந்தேன்.

அவை அனைத்துக்கும் நிதி ஒதுக்கப்பட்டிருந்தது. தேர்தலுக்காக இதனை செய்யவில்லை.

மேன்முறையீடு செய்யப்படும். சட்டரீதியான சில பிரச்சினைகள் உள்ளன” என மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

லலித் மற்றும் அனுஷவின் உடல்நிலை சிறப்பாக இல்லை

முன்னாள் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் தொலைத் தொடர்புல் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் அனுஷ பெல்பிட்ட ஆகியோரின் உடல் நிலைமை சிறப்பாக இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமத்திக்கப்பட்டுள்ள மேற்படி இருவரையும் இன்று பார்வையிட்டதன் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தாம் அங்கு சென்றபோது, தேசிய வைத்தியசாலையின் விசேட வைத்தியர் ஒருவர் அவர்களை தாம் அங்கு சென்றபோது, தேசிய வைத்தியசாலையின் விசேட வைத்தியர் ஒருவர் அவர்களை பார்வையிட்டதாக அழைக்கப்பட்டுள்ளதாக மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்.