விக்னேஸ்வரன் குரல் கொடுப்பது யாருக்காக? மகிந்த வெளியிட்ட தகவல்

Report Print Murali Murali in அரசியல்

வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் யாருக்காக குரல் கொடுக்கின்றார் என்பதை எம்மவர்களினால் புரிந்துகொள்ள முடியாது போயுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அண்மையில் கண்டிக்கு வியஜம் மேற்கொண்டிருந்த வடமாகாண முதலமைச்சர், போகம்பரை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை சந்தித்து பேசியிருந்தார்.

இது குறித்து முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடம் ஊடகவியலாளர்கள் கேள்வியெழுப்பியிருந்தனர். இதற்கு பதிலளித்து பேசிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

தொடர்ந்தும் பேசுகையில், "அரசியல் கைதிகளை சந்தித்து பேசுவதற்கு அவர்களுக்கு உரிமையுள்ளது. அவர்களுக்காகவே, இவர்கள் குரல் கொடுக்கின்றனர்.

எனினும், எம்மவர்களுக்கு இதனை புரிந்துகொள்ள முடியாது போயுள்ளதாக" முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.