சுதந்திரக்கட்சியில் தொடர்ந்து இருப்பேன்! அருந்திக உறுதி

Report Print Aasim in அரசியல்

அமைச்சுப் பதவி பறிக்கப்பட்டாலும் தொடர்ந்தும் சுதந்திரக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராக செயற்படப் போவதாக அருந்திக பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

சுற்றுலாத்துறை அபிவிருத்தி மற்றும் கிறித்தவ விவகாரங்கள் பிரதியமைச்சராக இருந்த அருந்திக பெர்னாண்டோ கடந்த காலங்களில் தொடர்ச்சியாக அரசாங்கத்தை விமர்சித்தும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு ஆதரவாகவும் கருத்துக்களை வெளியிட்டு வந்திருந்தார்.

இந்த நிலையில் இன்று அருந்திக பெர்னாண்டோவின் அமைச்சுப் பதவியை பறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவொன்றைப் பிறப்பித்துள்ளார்.

இதனையடுத்து ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்டுள்ள அருந்திக பெர்னாண்டோ, இந்த அரசாங்கத்தில் தொடர்ந்து நிலைத்திருக்கும் எண்ணம் தனக்கு இருக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஆரம்பம் முதலே தான் அரசாங்கத்தின் போக்குகளை விமர்சித்து வந்ததாகவும், அமைச்சுப் பதவி நீக்கப்பட்டாலும் தான் தொடர்ந்தும் சுதந்திரக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராக செயற்படப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், தான் அமைச்சுப் பதவியில் இருந்து நீக்கப்பட்டமை காரணமாக அரசாங்கத்தில் இருந்து விலகும் எண்ணம் கொண்ட அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் எண்ணத்தை மாற்றிக் கொள்ளப் போவதில்லை என்றும் அருந்திக பெர்னாண்டோ தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.