ஜனாதிபதி கூறவேண்டியதை தெளிவாக கூறிவிட்டார்

Report Print Akkash in அரசியல்

அனைவருக்கும் விடை கூற வேண்டிய அவசியம் ஜனாதிபதிக்கு இல்லை. அவர் கூறவேண்டியதை தெளிவாக கூறியுள்ளார். அதாவது இராணுவ வீரர்களை நாம் ஒருபோதும் தண்டிக்க மாட்டோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

எனினும் ஊடகங்களில் பிரசித்தி பெறுவதற்கும், அரசியல் இலாபங்களுக்காகவும் சிலர் இராணுவத்தினரின் பெரை பயன்படுத்துவதாக ஸ்ரீ.சு.கட்சியின் இளைஞர் அணியின் தலைவர் சாந்த பண்டார தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே இதை குறிப்பிட்டார். மேலும்,

இது பௌத்த நாடு, எமது நாட்டின் பௌத்த பிக்ககுகள், விகாரைகள் காப்பாற்றப்பட வேண்டும், அவர்களை யாரும் விமர்சனம் செய்ய இடமளிக்க கூடாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீ.சு.கட்சியின் மாநாடு பற்றி கூட்டு எதிர்க்கட்சியினர் எதுவும் பேசாமல் இருப்பதற்கு காரணம் இருக்கின்றது.

அவர்கள் எதிர்பார்த்தார்கள் மாநாட்டுக்கு கெம்பல் மைதானத்தின் அளவுக்கு கூட மக்கள் கூட்டம் வரமாட்டார்கள் என. ஆனால் அது பொய்யாகி விட்டது. அவர்கள் எதிர்பார்த்ததுக்கும் விட பல மடங்கு மக்கள் வருகைத்தந்துள்ளனர். இதனால் கூட்டு எதிக்கட்சியினர் வாயடைத்துப்போயுள்ளனர் எனவும் சாந்த பண்டார குறிப்பிட்டுள்ளார்.