இலங்கைக்கான நிதிக்குறைப்புக்கு அமெரிக்க செனட் உறுப்பினர்கள் எதிர்ப்பு

Report Print Ajith Ajith in அரசியல்

இலங்கைக்கு வழங்கப்படும் உதவிகளை அமெரிக்கா தமது 2018 ஆம் ஆண்டுக்கான பாதீட்டில் 92 சதவீதமாக குறைப்பதற்கு அந்த நாட்டின் ஜனாதிபதி டொனால்ட் டரம்ப் நிர்வாகம் எடுத்த நடவடிக்கையை அமெரிக்க செனட் சபையின் நிதியமைப்பு எதிர்த்துள்ளது.

இலங்கை கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பிராந்தியத்தில் அமைந்துள்ளமையால் அதனுடனான நல்லுறவு அமெரிக்காவிற்கு மிகவும் முக்கியமாகும்.

இந்த நிலையில் அந்த நாட்டுக்கான உதவி நிதியை குறைப்பது ஏற்றுக் கொள்ளக்கூடிய விடயம் இல்லை என்று செனட் சபையின் நிதியமைப்பு குழு அறிவுறுத்தியுள்ளது.

ட்ரம்பின் நிர்வாகத்தினால், 2018 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில், இலங்கைக்கான சகல உதவிகளுக்குமாக 43 மில்லியன் டொலர்களே ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.