27 அப்பாவிகளை தலையில் சுட்டு கொலை செய்தார்கள்! காரணம் கோத்தா: ரஞ்சன் ஆவேசம்

Report Print Shalini in அரசியல்

வெலிக்கடை சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தில் 27 கைதிகள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு உத்தரவிட்டவர் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ என பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.

வெலிக்கடை சிறைச்சாலைக்கு முன்பாக இன்று நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில்,

புகைப்பட்டத்தை காண்பித்து, பெயர்களை கூறி ஒவ்வொரு நபராக 27 பேரை கொலை செய்துள்ளார்கள் என குற்றம் சுமத்தியுள்ளார்.

நிராயுதபாணிகளாக, அப்பாவிகளாக நின்றவர்களுக்கு தலையில் வெடி வைத்து கொலை செய்துள்ளார்கள் எனவும் ஆவேசமாக தெரிவித்துள்ளார்.