மீன்பிடித்துறைமுகங்களை விற்பனை செய்ய அரசாங்கம் நடவடிக்கை

Report Print Aasim in அரசியல்

மீன்பிடித்துறைமுகங்களை அரசாங்கம் விற்பனை செய்யவுள்ளதாக ஜே.வி.பி. யின் பிரச்சாரச் செயலாளர் விஜித ஹேரத் குற்றம் சாட்டியுள்ளார்.

கொழும்பில் இன்று ஜே.வி.பி. சார்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இக்குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார்.

குறித்த செய்தியாளர் சந்திப்பில் தொடர்ந்தும் கருத்து வௌியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத், ஹம்பாந்தோட்டைத் துறைமுகத்தை விற்பனை செய்ததைப் போன்றே மீன்பிடிக் கூட்டுத்தாபனத்தின் துறைமுகங்களையும் விற்பனை செய்ய அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

மீன்பிடித்துறைமுகத்தின் தலைமை அலுவலகம் மற்றும் 11 படகுத்தரிப்பிடங்கள் என்பவற்றை இவ்வாறு விற்பனை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. தலைமை அலுவலகத்தை 28 கோடி ரூபாவுக்கும், 11 துறைமுகங்களையும் 169 கோடி ரூபாவுக்கும் விற்பனை செய்ய அரசாங்கம் உத்தேசித்துள்ளது.

அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை மீன்பிடித் தொழிலில் பாரிய பாதிப்பை ஏற்படுத்தி விடும் என்றும் விஜித ஹேரத் வலியுறுத்தியுள்ளார்.