பாஸ்கரலிங்கம் புலிகளுக்கு நிதி வழங்கினார்! பந்துல குற்றச்சாட்டு!

Report Print Aasim in அரசியல்

பாஸ்கரலிங்கம் நிதியமைச்சின் செயலாளராகப் பணியாற்றிய காலத்தில் 125 மில்லியன் ரூபாவை விடுதலைப் புலிகளுக்கு வழங்கியதாக பந்துல குணவர்த்தன குற்றம் சாட்டியுள்ளார்.

பிரதமரின் பொருளாதார விவகாரங்களுக்கான ஆலோசகர் பாஸ்கரலிங்கம், முன்னாள் ஜனாதிபதி பிரேமதாசவின் காலத்தில் நிதியமைச்சின் செயலாளராக கடமையாற்றியிருந்தார்.

குறித்த காலப்பகுதியில் அவர் பல்வேறு தடவைகளில் அவசர செலவினம் என்ற பெயரில் 125 மில்லியன் ரூபாவை திறைசேரியில் இருந்து பெற்று விடுதலைப் புலிகளுக்கு கையளித்திருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்த்தன குற்றம் சாட்டியுள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற கூட்டு எதிர்க்கட்சியின் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இக்குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வௌியிட்ட பந்துல குணவர்த்தன, 1989.08.09, 1989.09.15, 1989.09.27, 1989.11.01, 1989.11.30, 1989.12.13, 1990.01.08, 1990.01.20, 1990.02.20, 1990.03.02, 1990.03.21, 1990.04.19, 1990.04.20, 1990.06.06, 1990.06.08, ஆகிய தினங்களில் தலா ஐந்து மில்லியன் வீதமும் 1990.11.05ம் திகதி 50 மில்லியன் ரூபாவும் அவ்வாறு திறைசேரியில் இருந்து பாஸ்கரலிங்கத்தினால் பெறப்பட்டு விடுதலைப் புலிகளுக்குக் கையளிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான அனைத்து ஆவணங்களும் என்னிடம் உள்ளது. அவற்றை எதிர்வரும் நாட்களில் நான் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளேன்.

இதுவரை யாரும் அது தொடர்பான ஆவணங்களை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்திருக்கவில்லை என்றும் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.