வடக்கு கிழக்கு தமிழ் மக்களுக்கு தனி நாடு தேவையில்லை! மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்

வடக்கு கிழக்கு மக்கள்பொலிஸ் அதிகாரமோ, நீதித்துறை அதிகாரமோ, அதிகாரப் பகிர்வோ, அல்லது தனிநாடோ தேவையில்லை என ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரியான மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் அதிகாரங்களைக் குவித்து வைத்திருப்பதே நாட்டை ஒன்றாக வைத்திருக்கும். அதிகாரப் பகிர்வு பிரிவினைக்கே இட்டுச் செல்லும் என்பதை முட்டாள் ஆட்சியாளர்களால் புரிந்து கொள்ள முடியாது.

எனது 35 ஆண்டு கால இராணுவ வாழ்வில், 26 ஆண்டுகளை வடக்கு கிழக்கில் செலவிட்டுள்ளேன். போர்க்காலத்தில் வடக்கு கிழக்கில் பணியாற்றிய பெரும்பாலான இராணுவ அதிகாரிகள் இப்போது ஓய்வு பெற்று விட்டனர்.

அந்தப் பகுதி மக்களுடன் பல ஆண்டுகளைக் கழித்தவன் என்ற வகையில், அவர்களுக்கு என்ன தேவை என்று எனக்குத் தெரியும்.

அவர்கள் எவருக்கும் பொலிஸ் அதிகாரமோ, நீதித்துறை அதிகாரமோ, அதிகாரப் பகிர்வோ, அல்லது தனிநாடோ தேவையில்லை. அவர்கள் அனைவரும் கோருவது அமைதியான மதிப்பான வாழ்வைத் தான்.

கொழும்பில் அதிகாரங்களைக் குவித்து வைத்திருப்பதே நாட்டை ஒன்றாக வைத்திருக்கும். அதிகாரப் பகிர்வு பிரிவினைக்கே இட்டுச் செல்லும் என்பதை முட்டாள் ஆட்சியாளர்களால் புரிந்து கொள்ள முடியாது என்று குறிப்பிட்டுள்ளார்.