ஜனாதிபதி தலைமையில் தேசிய பொருளாதார ஆலோசனை சபைக்கூட்டம்

Report Print Aasim in அரசியல்

தேசிய பொருளாதார விவகாரங்களுக்கான ஆலோசனை சபையின் கூட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்றுள்ளது.

தேசிய பொருளாதார விவகாரங்களுக்கான ஆலோசனைச் சபை உருவாக்கப்பட்டதன் பின்னர் அதன் கலந்துரையாடல் முதற்தடவையாக ஜனாதிபதி செயலகத்தில் இன்றைய தினம்(12) இடம்பெற்றுள்ளது.

குறித்த கூட்டத்தின் போது நாட்டின் பொருளாதார மேம்பாட்டை இலக்காகக் கொண்ட பொருளாதார செயற்திட்டங்கள் குறித்துக் கலந்துரையாடப்பட்டுள்ளதுடன், அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான வழிமுறைகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டுள்ளது.

இதேவேளை, தேசிய பொருளாதார ஆலோசனை சபையின் தலைவராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்படுகின்றார்.

மேலும், இக்கலந்துரையாடலில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர்களான மங்கள சமரவீர, சரத் அமுனுகம, சுசில் பிரேம்ஜயந்த, ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்னாண்டோ, பிரதமரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, நிதியமைச்சின் செயலாளர் சமரதுங்க, அமைச்சரவையின் செயலாளர் சுமித் அபேசிங்க, தேசிய கொள்கைத்திட்டமிடல் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சின் செயலாளர் சாந்த பண்டார, தேசிய பொருளாதார விவகாரங்களுக்கான ஆலோசனைச் சபையின் செயலாளர் லலித் சமரக்கோன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.