எயிட்ஸைக் கட்டுப்படுத்துவதில் இலங்கை சாதனை

Report Print Aasim in அரசியல்

எயிட்ஸ் நோயைக் கட்டுப்படுத்தும் செயற்பாட்டில் இலங்கை குறிப்பிடத்தக்க சாதனையை எட்டிப்பிடித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எயிட்ஸ் ​நோய் தொற்றிய தாய்மாருக்குப்பிறக்கும் குழந்தைகளை எயிட்ஸ் நோய் தொற்றா வண்ணம் பாதுகாப்பதில் உலகளாவிய ரீதியில் பெரும் சிக்கல்களை சுகாதாரத்துறையினர் எதிர்கொண்டு வருகின்றனர்.

அந்தவகையில் தாயிடமிருந்து சேய்க்கு எயிட்ஸ் நோய் பரவுவதைத் தடுக்கும் செயற்பாட்டில் வெற்றிகண்ட மூன்றாவது நாடாக சர்வதேசத்தில் இலங்கை பெயர் பதித்துள்ளது.

அண்மைக்காலத்தில் எயிட்ஸ் நோய் தொற்றுக்குள்ளான தாய்மார் 11 பேர் பிரசவித்த குழந்தைகள் எதுவித நோய்த் தொற்றுமின்றி சுகாதாரத்துறையினரின் தீவிர கண்காணிப்பின் கீழ் ஆரோக்கியமாகப் பிறந்துள்ளனர்.

இதற்கு முன்னர் தாயிடமிருந்து சேய்க்கு எயிட்ஸ் நோய் தொற்றுவதைத் தடுக்கும் செயற்பாட்டில் தாய்லாந்து மற்றும் கியூபா ஆகிய நாடுகளே வெற்றி கண்டிருந்தன.

எனினும் உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டலின் கீழ் இலங்கையும் குறித்த சாதனையை நிகழ்த்தியுள்ளது.