அரசாங்க மருத்துவமனைகளில் மருந்துத்தட்டுப்பாடு கிடையாது : ராஜித

Report Print Aasim in அரசியல்

அரசாங்கத்தின் எந்தவொரு மருத்துவமனையிலும் எவ்வகையான மருந்துப் பொருளுக்கும் தட்டுப்பாடு கிடையாது என்று சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன வலியுறுத்தியுள்ளார்.

அரசாங்க மருத்துவமனைகளில் கடும் மருந்துத் தட்டுப்பாடு நிலவுவதாகவும், வடமத்திய மாகாணத்தின் சில பிரதேசங்களில் கிராமிய மருத்துவமனைகள் மூடப்படும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளதாகவும் அரச மருத்துவர்கள் சங்கம் அண்மையில் பகிரங்க குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்திருந்தது.

இதற்குப் பதிலளிக்கும் வகையில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அமைச்சர் ராஜித சேனாரத்ன மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அத்துடன் தேசிய மருத்துவமனையின் பணிப்பாளர் மருத்துவர் அனில் ஜாசிங்கவும் அறிக்கையொன்றின் மூலமாக மருத்துவமனைகளில் மருந்துத் தட்டுப்பாடு குறித்த குற்றச்சாட்டை மறுத்துரைத்துள்ளார்.

இதேவேளை, கிராமிய மருத்துவமனைகள் மூடப்படும் அபாயம் குறித்த மருத்துவர் சங்கத்தின் குற்றச்சாட்டும் அடிப்படை ஆதாரமற்றது என்று அமைச்சர் ராஜித சேனாரத்ன வலியுறுத்தியுள்ளார்.