புதிய கடற்படை தளபதியை சந்தித்த துருக்கிய பாதுகாப்பு ஆலோசகர்

Report Print Suman Suman in அரசியல்

இலங்கையின் துருக்கிய பாதுகாப்பு ஆலோசகர் கர்னல் கேமல் கரமன் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ட்ரவிஸ் சின்னய்யாவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இந்த சந்திப்பு இன்றைய தினம்(12) கடற்படை தலைமையகத்தில் இடம்பெற்றுள்ளதாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்போது, இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, இச்சந்திப்பினை நினைவு கூறும் வகையில் நினைவுச் சின்னங்களும் பரிமாரிக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.