காணாமல் போனோர் அலுவலக செயற்பாட்டுக்கான வர்த்தமானியில் ஜனாதிபதி கையெழுத்து!

Report Print Ajith Ajith in அரசியல்

காணாமல் போனோர் தொடர்பான அலுவலக இயக்கத்துக்கான வர்த்தமானி அறிவித்தலில் ஜனாதிபதி இன்று கையெழுத்திட்டுள்ளார்.

இதன்படி காணாமல் போனோர் தொடர்பான அலுவலக சட்டம் செப்டம்பர் 15 முதல்நடைமுறைப்படுத்தப்படும் என்று தேசிய ஒருமைப்பாட்டுக்கான அமைச்சு தெரிவித்துள்ளது.

காணாமல் போனோர் அலுவலக நடைமுறை கையெழுத்திடல் கடந்த வாரம் காணாமல் போனோரின் உறவினர்களை ஜனாதிபதி சந்தித்த நிலையிலேயே இடம்பெற்றுள்ளது.

இந்தநிலையில் இந்த கையெழுத்திடல், நல்லிணக்கத்துக்கான மற்றும் ஒரு படி என்று தேசிய ஒருமைப்பாட்டுக்கான அமைச்சின் செயலாளர் வி சிவஞானசோதி தெரிவித்துள்ளார்