பழைய குளிரூட்டிகளை பாவனையில் இருந்து அப்புறப்படுத்த நடவடிக்கை

Report Print Aasim in அரசியல்

இலங்கையில் பொதுமக்கள் மத்தியில் பாவனையில் உள்ள பழைய குளிரூட்டிகளை அப்புறப்படுத்த மின்சக்தி முகாமைத்துவ சபை தீர்மானித்துள்ளது.

பாவனையில் உள்ள பெரும்பாலான குளிரூட்டிகள் காரணமாக ஏராளமான மின்வலு வீணாக்கப்படுவதாக மின்சக்தி அமைச்சின் ஆய்வொன்று தெரிவிக்கின்றது.

எனவே அவ்வாறு அதிக மின்வலுவை வீணடிக்கும் பழைய குளிரூட்டிகளை பாவனையில் இருந்து அப்புறப்படுத்த மின்சக்தி முகாமைத்துவ சபை தீர்மானித்துள்ளது.

தற்போது பொதுமக்கள் மத்தியில் 30 வகையான மாதிரிகளில் குளிரூட்டிகள் காணப்படுகின்றன. இவற்றில் 24 வகை குளிரூட்டிகள் பரீட்சிக்கப்பட்டு அவற்றின் மின் கொள்ளளவு அளவிடப்பட்டுள்ளது.

மின்சக்தி முகாமைத்துவ சபையின் தீர்மானத்துக்கமைய 190-250 லீற்றர் கொள்ளளவு கொண்ட குளிரூட்டிகளை பாவனையில் இருந்து அப்புறப்படுத்த எதிர்பார்க்கப்படுகின்றது. அதற்குப் பதிலாக புதிய குளிரூட்டிகளை சலுகை அடிப்படையில் வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் நாளொன்றுக்கு 162 மெகாவோட் மின் சக்தி சேமிக்கப்படும் என்று மின்சக்தி முகாமைத்துவ சபை குறிப்பிட்டுள்ளது.