ஶ்ரீலங்கன் விமான சேவை மறுசீரமைக்கப்பட வேண்டும்

Report Print Aasim in அரசியல்

ஶ்ரீலங்கன் விமான சேவை இலாபமீட்டும் வகையில் மறுசீரமைக்கப்பட வேண்டும் என்று இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

அரச முயற்சிகள் மற்றும் பொதுநிறுவனங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா, தனது அமைச்சின் கீழ் வரும் ஶ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் மற்றும் விமான நிலையத்துக்கு செவ்வாய்க்கிழமை மாலை விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த 2016ஆம் ஆண்டில் ஶ்ரீலங்கன் விமான சேவை 12 மில்லியன் நட்டத்தை சந்தித்துள்ளது. இதில் எரிபொருள், விமானங்களுக்கான தவணைக் கட்டணம் என்பனவும் உள்ளடங்கியுள்ளது.

எனினும் ஶ்ரீலங்கன் விமான சேவை அனைத்துத் துறைகளிலும் லாபமீட்டும் வகையில் மறுசீரமைக்கப்பட வேண்டும். அதற்கான விமான சேவைகள் நிறுவனத்தை தனியார் மயப்படுத்துவதாக அர்த்தம் கொள்ளத் தேவையில்லை என்றும் இராஜங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.