சிறைச்சாலை மருத்துவமனையில் 02 கைத்தொலைபேசிகள் கண்டெடுப்பு

Report Print Aasim in அரசியல்

வெலிக்கடை சிறைச்சாலை மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கையில் அங்கிருந்து இரண்டு கைத்தொலைபேசிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

சிறைச்சாலைப் புலனாய்வுப் பிரிவினர் செவ்வாய்க்கிழமை(12) மாலை வெலிக்கடை சிறைச்சாலை மருத்துவமனையில் திடீர் சோதனை நடவடிக்கையொன்றை மேற்கொண்டிருந்தனர்.

சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சர் டீ.எம்.சுவாமிநாதனின் விசேட பணிப்புரையின் பேரில் மேற்கொள்ளப்பட்ட குறித்த சோதனை நடவடிக்கையின் ​போது அமைச்சின் அதிகாரிகள் இரண்டு ​பேரும் நேரில் சமூகமளித்து அவதானித்திருந்தனர்.

இதன்போது இரண்டு கைத்தொலைபேசிகள் மற்றும் அவற்றுக்கான சிம் என்பனவும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, சம்பவம் தொடர்பில் தற்போது விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.