தேர்தல் திருத்தச்சட்டம் காரணமாக இளைஞர்களுக்குப் பாதிப்பு! சாந்த பண்டார

Report Print Aasim in அரசியல்

உள்ளூராட்சித் தேர்தல் திருத்தச் சட்டம் இளைஞர்களின் அரசியல் கனவுக்குப் பாதிப்பு என்று சுதந்திரக் கட்சி இளைஞர் அணித்தலைவர் சாந்த பண்டார தெரிவித்துள்ளார்.

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சித் தலைமையகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடக மாநாட்டில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போது அவர் இதனைத்தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வௌியிட்ட அவர், முன்னைய தேர்தல் சட்டத்தில் வேட்பு மனுவில் 40 வீதம் இளைஞர்களுக்கு கண்டிப்பாக வாய்ப்பளிக்கப்பட வேண்டும் என்ற சரத்தொன்று காணப்பட்டது. ஆனால் புதிய திருத்தச் சட்டத்தில் அந்தச் சரத்து இல்லாதொழிக்கப்பட்டுள்ளது.

திருத்தச்சட்டத்துக்கான அங்கீகாரம் பெறப்படுவதற்கு முன்னதாக இது குறித்து சுதந்திரக் கட்சியின் இளைஞர் அணி மாத்திரமே போராட்டங்களை மேற்கொண்டது. ஏனைய கட்சிகளின் இளைஞர் அணிகள் மௌனம் சாதித்தன.

எனினும் சுதந்திரக்கட்சி வேட்பாளர் பட்டியலில் இளைஞர்களுக்குப் போதுமான இடம் அளிப்பதாக ஜனாதிபதி உறுதியளித்துள்ளார். அந்த வகையில் சுதந்திரக்கட்சி இளைஞர்களுக்கு ஒருபோதும் அநீதி இழைக்கப்பட மாட்டாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.