வெளிநாடு செல்ல ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தடை

Report Print Ajith Ajith in அரசியல்

ஆளுங்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களது அனைத்து வெளிநாட்டுப் பயணங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச் சட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி விவாதத்துக்கு எடுத்து நிறைவேற்ற அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இந்த நிலையில், குறித்த காலப்பகுதிக்குள் ஆளுந்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களை வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டாம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஜனாதிபதியும், தேசிய ஐக்கிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பிரதமரும் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக அறிய முடிகின்றது.