மாத்தறையில் ஐக்கிய தேசியக் கட்சியின் மறுசீரமைப்பில் மங்கள தீவிரம்

Report Print Aasim in அரசியல்

மாத்தறை மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியை மறுசீரமைக்கும் பணிகளில் அமைச்சர் மங்கள சமரவீர தீவிரம் காட்டத் தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தல்களின் போது ஐக்கிய தேசியக் கட்சியை மாத்தறை மாவட்டத்தில் வெற்றியீட்ட வைக்கும் பொறுப்பை அமைச்சர் மங்கள சமரவீர ஏற்றுக் கொண்டுள்ளார்.

இதன் காரணமாக தற்போது கட்சியை மறுசீரமைப்பது, உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களுக்கான வேட்பாளர்களை இனம் காணுதல் போன்ற நடவடிக்கைகள் அமைச்சர் மங்கள சமரவீரவின் தலைமையில் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அதன் ஒருகட்டமாக உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வேட்பாளர்களை தெரிவுசெய்வதற்கான குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.

வேட்பாளர் தெரிவு விடயத்தில் தலையிடுவதிலிருந்து ஒதுங்கிக் கொண்டுள்ள அமைச்சர் மங்கள சமரவீர, தென் மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் ஜஸ்டின் கலப்பத்தியிடம் அதற்கான பொறுப்பை ஒப்படைத்துள்ளார்.