அருந்திக, ஜனாதிபதி சந்திப்பு

Report Print Aasim in அரசியல்

பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் பிரதியமைச்சர் அருந்திக பெர்னாண்டோ, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இன்று காலை இச்சந்திப்பு நடைபெற்றுள்ளது.

சுற்றுலாத்துறை அபிவிருத்தி மற்றும் கிறித்தவ மத விவகாரங்கள் பிரதியமைச்சராக இருந்த அருந்திக பெர்னாண்டோ நேற்றைய தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் பிரதியமைச்சுப் பதவியில் இருந்து நீக்கப்பட்டிருந்தார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு ஆதரவான கூட்டு எதிர்க்கட்சியுடன் இணையப் போவதாக அண்மையில் அருந்திக பெர்னாண்டோ பகிரங்கமாக அறிவித்தல் விடுத்திருந்த நிலையில் அவரது பதவி பறிக்கப்பட்டிருந்தது.

தான் பிரதியமைச்சுப் பதவியில் இருந்து நீக்கப்பட்ட போதிலும் சுதந்திரக்கட்சியில் தொடர்ந்தும் நிலைத்திருக்கப் போவதாக அருந்திக பெர்னாண்டோ நேற்று அறிவித்திருந்தார்.

இந்நிலையில் அவர் இன்று காலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளதாக அறியக் கிடைத்துள்ளது.