ஜனாதிபதியை வாரந்தோறும் சந்திக்கும் சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள்

Report Print Steephen Steephen in அரசியல்

ஜனாதிபதியுடன் வாராந்தம் கலந்துரையாடல்களை நடத்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளரும், அமைச்சருமான துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இந்த கலந்துரையாடல்கள் அடுத்த தேர்தலை இலக்கு வைத்தும், கட்சியின் மறுசீரமைப்புக்காகவும் மேற்கொள்ளப்படவுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

கண்டி தலதா மாளிகையில் இன்று காலை வழிபாடுகளில் ஈடுபட்ட பின்னர் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இந்த நிலையில் கலந்துரையாடல் ஒன்று நேற்றைய தினம் இடம்பெற்றதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், அரசாங்கம் ஒன்றில் அங்கம் வகிக்கும் போது எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை அனைவரும் புரிந்துக்கொள்ள வேண்டும் என கூறியுள்ளார்.