வீரரைப்போல பேசும் மஹிந்தவே குற்றவாளி: ராஜித

Report Print Sinan in அரசியல்

தீர்ப்பு கொடுக்கப்படுவதற்கு முன்னர் தமது நிலைப்பாட்டை கூறியிருக்க வேண்டும். அதை விடுத்து தீர்ப்பு வழங்கப்பட்ட பின்னர் நான்தான் உத்தரவிட்டேன் என மஹிந்த கூறுவது ஏமாற்று நாடகம் என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கு ஊடகவியலாளர் சந்திப்பு கொழும்பில் இன்று இடம்பெற்றது.

இதில் சில் துணி விவகாரத்தில் கடுழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள லலித் வீரதுங்கவிற்விற்கு உத்தரவிட்டது நானே என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். இது குறித்து உங்கள் கருத்து என்ன? என ஊடகவியலாளர்கள் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதற்கு பதிலளிக்கையில், வழக்கு நடைபெற்று தீர்ப்பு கொடுக்கப்பட்ட பிறகே, மஹிந்த ராஜபக்ஸ இதற்கான உத்தரவை நானே பிறப்பித்தேன் என வீரரைப்போல் தெரிவிக்கின்றார், தீர்ப்பு வழங்கப்படுவதற்கு முன்னர் இதை அறிவித்திருக்க வேண்டும். ஆகவே மஹிந்தவே குற்றவாளி என ராஜித குறிப்பிட்டார்.

அத்துடன், பிக்குகளுக்கு வழங்கப்பட்டதாக கூறப்படும் சில் துணிகளுடன் மஹிந்தவுக்கு அதரவான தேர்தல் பிரச்சார துண்டுகள் மற்றும் அவருடைய புகைப்படம் பொறிக்கப்பட்ட கடிகாரங்களும் காணப்படுகின்றன.

ஆகவே அரச பணத்தை இவ்வாறு தனிப்பட்ட பிரச்சாரத்திற்கு பயன்படுத்துவது தவறு எனவும் ராஜித சேனாரத்ன சுட்டிக்காட்டினார்.