மேல்மாகாண சபையில் மூவரின் பதவிகள் பறிப்பு

Report Print Aasim in அரசியல்

மேல் மாகாண சபையில் ஆளுந்தரப்பு முக்கியஸ்தர்கள் மூவரின் பதவிகள் இன்று முதலமைச்சர் இசுரு தேவப்பிரியவினால் பறிக்கப்பட்டுள்ளது.

மாகாண சபையின் ஆளுங்கட்சி அமைப்பாளர் குணசிறி ஜயநாத், சபை முதல்வர் சுனில் ஜயமினி, கணக்காய்வுக் குழுவின் பதில் தலைவர் மெரில் பெரேரா ஆகியோரின் பதவிகளே அவ்வாறு பறிக்கப்பட்டுள்ளது.

அதற்குப் பதிலாக ஆளுங்கட்சியின் பிரதம அமைப்பாளராக சந்தன ஜயகொடி, சபை முதல்வராக ஹெக்டர் பெத்மகே, கணக்காய்வுக் குழுவின் பதில் தலைவராக சுமித் சொய்சா ஆகியோர் முதலமைச்சர் இசுரு தேவப்பிரியவினால் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

மாகாண சபையில் முன்வைக்கப்பட்ட 20ஆவது திருத்தச் சட்டத்துக்கு ஆதரவான பிரேரணையை எதிர்த்து வாக்களித்ததன் காரணமாகவே தமது பதவிகள் பறிக்கப்பட்டதாக மெரில் பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தவர்களுக்கே புதிதாக பதவிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.