முன்னாள் தலைவர்கள் மற்றும் எதிர்கால தலைவர்களுக்கு மைத்திரி முன்னுதாரணம்

Report Print Steephen Steephen in அரசியல்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஆட்சியில் இருந்த முன்னாள் தலைவர்களுக்கு மாத்திரமல்லாது ஆட்சிக்கு வரவுள்ள தலைவர்களுக்கும் நல்ல முன்னுதாரணத்தை வழங்கியுள்ளதாக மல்வத்து பௌத்த பீடத்தின் அநுநாயக்கர் திம்பும்கும்புரே விமலதம்ம தேரர் தெரிவித்துள்ளார்.

மியன்மார் அரசாங்கம் தனக்கு வழங்கிய யானையை ஜனாதிபதி தலதா மாளிகைக்கு அன்பளிப்புச் செய்தார், ரஷ்யா வழங்கிய வாளை தேசிய அருங்காட்சியகத்திற்கு வழங்கினார்.

வெளிநாடுகள் தனக்கு வழங்கும் பெறுமதியான பரிசுகளை ஜனாதிபதி பொதுமக்களின் நலனுக்காக வழங்கும் போது சில அரசியல்வாதிகள் தமக்கு கிடைக்கும் பரிசுகளை தனிப்பட்ட அருங்காட்சியங்களில் வைத்துக்கொள்வதாகவும் விமலதம்ம தேரர் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரான அமைச்சர் துமிந்த திஸாநாயக்க இன்று மல்வத்து மஹா விகாரையில் தேரரை சந்தித்த போதே அவர் இதனை கூறியுள்ளார்.