இலங்கையில் சீனா மேற்கொண்டுள்ள நடவடிக்கை! ராகுல் காந்திக்கு ஏற்பட்டுள்ள கவலை

Report Print Murali Murali in அரசியல்

இலங்கையில், சீனா மேற்கொண்டுள்ள வலுவான பிரசன்னத்தை இந்திய காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள அவர், கலிபோர்னியாவில் அமைந்துள்ள Berkeley பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய போதே இவ்வாறு கூறியுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், “நேபாளத்தை பார்த்தால் அங்கு சீன நாட்டவர்கள் இருக்கின்றனர். மியன்மாரை பார்த்தால் அங்கும் சீனர்கள் இருக்கின்றனர்.

இந்நிலையில், தற்போது இலங்கையிலும் சீனாவின் வலுவான பிரசன்னத்தை காணமுடிகின்றது. அத்துடன், மாலைத்தீவிலும் சீன நாட்டவர்கள் இருக்கின்றனர்.

எனினும், இதனை இந்தியாவிற்கு பாதிப்பான ஒரு விடயமாகவே பார்கின்றேன். இந்நிலையில், அமெரிக்காவுடனான நெருக்கமான உறவை ஏற்றுக்கொள்வதாக” அவர் மேலும் தெரிவித்துள்ளார்.