வடகொரியா கதையும் ஜகத் ஜயசூரிய கதையும் ஒன்றே! அமைச்சரவையில் சிரிப்பு

Report Print Shalini in அரசியல்

யுத்தக்குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள ஜகத் ஜெயசூரிய தொடர்பில் எழும் குற்றச்சாட்டுக்களும், வடகொரியாவால் இலங்கைக்கு பிரச்சினை என எழுப்பப்படும் குற்றச்சாட்டுக்களும் ஒரே கதை என சுகாதார அமைச்சரும், அமைச்சரவைப் பேச்சாளருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இதை குறிப்பிட்டார்.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்

இதில், ஐக்கிய நாடுகள் சபை மற்றும் உலகநாடுகளின் எதிர்ப்பை மீறி வடகொரியா அணு ஆயுத சோதனைகளில் ஈடுபட்டு வருகின்ற நிலையில் அந்நாட்டிற்கு எதிராக பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.

எனினும், அந்த தடைகளை மீறிய வகையில் வடகொரியாவிடம் இருந்து இரும்பு, உருக்கு உள்ளிட்ட பொருட்களை இலங்கை உள்ளிட்ட சில நாடுகள் இறக்குமதி செய்துள்ளதாக வெளியாகும் குற்றச்சாட்டு தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

இதற்கு பதிலளித்த அமைச்சர் ராஜித,

அவ்வாறான குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து நான் அறிந்திருக்கவில்லை.

ஆனால் ஊடகங்களில் இவ்விடயம் பரவலாக வெளிவந்துள்ளன. ஜகத் ஜயசூரியவின் கதை போன்றுதான் இந்த குற்றச்சாட்டுக்களும் இலங்கை மீது சுமத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கிருந்த ஊடகவியலாளர்கள் உட்பட அமைச்சர்கள் அனைவரும் சிரித்தமை குறிப்பிடத்தக்கது.

advertisement