சொந்த செலவில் சூனியம் வைத்த மஹிந்த! கைது செய்யப்பட வாய்ப்பு

Report Print Steephen Steephen in அரசியல்

சில் துணி வழக்கு சம்பந்தமாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வெளியிட்டுள்ள கருத்துக்கு அவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய முடியும் என அமைச்சரவை இணைப் பேச்சாளரான அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கு 24 நாட்களாக நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. அப்போது நீதிமன்றத்திற்கு வந்து தானே உத்தரவிட்டேன் எனக் கூறியிருக்கலாம்.

அப்படி எதனையும் செய்யாமல், இடத்திற்கு இடம் தானே ஆலோசனை வழங்கியதாக சண்டியர் போல் கூறி வருகிறார்.

குற்றத்தை அவர் ஒப்புக்கொண்டு, உத்தரவிட்டது தான் கூறுவாரானால், அவரை நீதிமன்றத்திற்கு கொண்டு வருமாறும் எவரும் வழக்கு போடலாம் என ராஜித கூறியுள்ளார்.

இந்த வழக்கு தீர்ப்பு குறித்து பௌத்த மத தலைவர்கள் வெளியிட்டு வரும் கருத்து தொடர்பில் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், பௌத்த பிக்குமாருக்கு இப்போதுதான் இந்த விடயம் நினைவுக்கு வந்துள்ளது.

தேங்காய் திருடி குற்றத்திற்கு சிறுவன் ஒருவரை சிறையில் அடைத்த போது இவர்கள் பிண்ட பாத்திரம் ஏந்தியிருக்கலாம் என தெரிவித்துள்ளார்.