அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவராக சேன சூரியப்பெரும நியமனம்

Report Print Aasim in அரசியல்

அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவராக வர்த்தகர் சேன சூரியப்பெரும இன்று தொடக்கம் நியமனம் பெற்றுள்ளார்.

முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க அமைச்சராக இருந்த காலத்தில் அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவராக ரொமேஷ் ஜயவர்த்தன நியமிக்கப்பட்டிருந்தார்.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்

இவர் ரவி கருணாநாயக்கவின் மனைவியின் தங்கை கணவராவார்.

இந்நிலையில் ரவி கருணாநாயக்க அமைச்சுப் பதவியிலிருந்து விலகியதன் பின்னர் அவரின் கீழ் செயற்பட்ட லொத்தர் சபைகள் நிதியமைச்சின் கீழ் மீண்டும் கொண்டு வரப்பட்டது.

அதன் பின்னர் அவற்றின் முகாமைத்துவத்தில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அதன் பிரகாரம் அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவராக வர்த்தகர் சேன சூரியப்பெருமவும், செயற்பாட்டுப் பணிப்பாளராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எச். ஆர். பியசிறியும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கான நியமனங்களை அமைச்சர் மங்கள சமரவீர இன்று வழங்கி வைத்துள்ளார்.

advertisement